விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுவதால், ஜூலை 8 முதல் 10ம் தேதி வரையிலும் வாக்கு எண்ணிகை நடைபெறும் ஜூலை 13-ம் தேதியும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட விழுப்புரம் ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் 10.07.2024 அன்று நடைபெறுவதையொட்டி 08.07.2024 காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் [அனைத்து FL2 to FL11 (FL6 தவிர)] மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
அரசாணை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் 08.07.2024 காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
08.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் 10.07.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 13.07.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“