/indian-express-tamil/media/media_files/kCACvVMo2drIcKDgrdtU.jpg)
Vikravandi
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வருகிற 10 ஆம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13 ஆம் தேதி (சனிக்கிழமை) எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா ஆகியோர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், தற்போது அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தி.மு.க. மு.க.ஸ்டாலின் தன் X பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் ஸ்டாலின் பேசுகையில், ‘ஜூலை 10-ஆம் நாள் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கின்ற சிவ சண்முகத்திற்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற அன்னியூர் சிவா என்கின்ற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மண்ணின் மைந்தர்.
சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் @arivalayam-த்தின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திரு. அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!#VikravandiByElection#Vote4DMKpic.twitter.com/Oil1HPF5eH
— M.K.Stalin (@mkstalin) July 5, 2024
மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.
1986 ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கலைஞரோட உடன்பிறப்புகளில் அவரும் ஒருத்தர். கலைஞருடைய பாணியில் சொல்ல வேண்டும் என்றால் தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கின்ற ரத்த நாளங்களில் ஒருத்தர்.
வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20% உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக ஆட்சி. 1987 போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான போராளிகளுக்கு நினைவு மண்டபம் கட்டப்படுகிறது.
சமூகநீதிக்கு எதிரான பாஜக கூட்டணியை விக்கிரவாண்டி தொகுதியில் தோற்கடிக்க வேண்டும். சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்’ இவ்வாறு மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.