/indian-express-tamil/media/media_files/aaFajIQ6LYDWtiw8htcl.jpg)
தமிழகத்தில் இடைத்தேர்தலை எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் இடைத்தேர்தல் என்பது எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள், பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது.
அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர்களே காரணத்தை சொல்லட்டும். 2026 தேர்தலில் எந்த கட்சி எப்படி ஓட்டு வாங்க போகிறது என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் எதிர்பார்ப்பை சொல்லிக் கொண்டிருக்கலாம் ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வரக்கூடிய இரண்டு ஆண்டு காலம் மக்கள் பணி செய்து ஒரு வெற்றி முகமான கூட்டணியாக மாறப்போவதில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறினார்.
தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் கூட்டணி வேட்பாளர் நிற்பதற்காக ஆதரவு கொடுத்து தேர்தலில் கடுமையாக பணியாற்ற போகிறோம். தேர்தல் என்பது ஒவ்வொரு அரசுக்கும் கட்சிக்கும் மக்கள் எப்படி மதிப்பீடு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டுதான் என்றாலும் இந்த தேர்தலில் நாங்கள் தைரியமாக போட்டியிடுகிறோம் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் தகவல் என்றும் சுட்டிக்காட்டினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.