விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க பிரச்சாரத்தில் இடம்பெற்ற பேனரில் மறைந்த முன்னாள் அ.தி.மு.க முதல்வர் ஜெயலலிதாவின் படம் இருந்தது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிலையில், பா.ம.க பிரச்சார பேனரில் ஜெயலலிதா படம் இடம்பெற்றது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இ.பி.எஸ், விக்கிரவாண்டி பரப்புரையில் பா.ம.கவினர் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தியது எங்களுக்குப் பெருமை. அ.தி.மு.க தலைவர்களின் படத்தை போட்டால் தான் மக்கள் வாக்கு அளிப்பர் என எதிரணியினரே நம்புகின்றனர்.
எங்கள் தலைவரின் படத்தை பயன்படுத்தினால் தான் ஓட்டு கிடைக்கும் என எதிரணியினரே நம்புகின்றனர் என அவர் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“