நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். கட்சியின் கொடி மற்றும் பாடலை அண்மையில் விஜய் அறிமுகம் செய்தார். இந்நிலையில் த.வெ.க-ன் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாநாட்டை நடத்த அனுமதி கோரி விஜய் கட்சி நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் அனுமதி கடிதம் அளித்தனர்.
அதன்படி தற்போது தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மேலும் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மாநாட்டிற்கு மது அருந்தி வரக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளை கூறி விஜய், தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“