/tamil-ie/media/media_files/uploads/2021/01/2-Copy-2-68.jpg)
village cooking channel village cooking rahul gandhi
village cooking channel village cooking rahul gandhi : நேற்று இரவு முதல் இணையத்தில் சென்ஷேனல் ஹிட்டாக பார்க்கப்பட்டு வருவது வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராகுல் வீடியோ தான்.
தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் நடத்தி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, 'வில்லேஜ் குக்கிங் சேனல்' எனும் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடியுள்ளார்.
யூடியூபில் பிரபலமான 'வில்லேஜ் குக்கிங் சேனல்' நடத்தி வரும் குழு சமைக்கும் இடத்திற்கு வருகைதந்த ராகுல் காந்தி, அவர்களுடன் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். இவர்களுடன் கலந்து கொண்ட கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி ராகுல் உரையாடலை யூடியூப் குழுவினருக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் ஓலைப்பாயில் அமர்ந்து குழுவினருடன் சகஜமாக காளான் பிரியாணியை தலைவாழை இலையில் சாப்பிட்டு மகிழ்ந்தார். “நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு” என தனது ஃபீட் பேக்கையும் பதிவு செய்தார்ராகுல். ராகுலின் வருகை யூடியூப் குழுவினரை பரவசத்தில் ஆழ்த்தியது. பின்பு அங்கிருந்து நன்றிகள் உடன் ராகுல் என கூறி விரைந்தார்.
ராகுல் காந்தியின் இந்த வீடியோ நேற்று இரவு முதல் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us