Advertisment

கிராம அளவில் குழந்தை திருமண தடுப்பு குழு அமைக்கப்படும்; அமைச்சர் கீதா ஜீவன்

Village level committee to prevent child marriage in Tamilnadu: கிராமங்கள் அளவிலான குழந்தை திருமண தடுப்புக் குழுக்களை அமைக்க மாவட்ட அலுவலர்களிடம் கூறியுள்ளோம் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கிராம அளவில் குழந்தை திருமண தடுப்பு குழு அமைக்கப்படும்; அமைச்சர் கீதா ஜீவன்

குழந்தை திருமணங்களைத் தடுக்க மாநில சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணங்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதனை தடுக்க சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குழந்தை திருமணத்தை நடத்தும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ என்ற தன்னார்வ அமைப்பு அளித்த அறிக்கையின் படி சேலம், தருமபுரி, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 10 ஒன்றியங்கள் மற்றும் 72 பழங்குடியின கிராமங்களில் 40% அளவிற்கு குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மே மாதம் 98 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 60 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கையின் படி, மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் மட்டும் கடந்த ஆண்டு 2020ல் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது.

மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறையும்  இத்தகைய நடைமுறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை தடுக்க கிராமங்கள் அளவிலான குழந்தை திருமண தடுப்புக் குழுக்களை அமைக்க மாவட்ட அலுவலர்களிடம் கூறியுள்ளோம் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Girl Child Underage Marriage
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment