கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் திமுக உறுப்பினர்களின் குடும்பத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஊராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.31) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்திட்டத்திற்கு தகுதியான 552 பெண்களில் 230 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர், “பெண்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அதிகாரிகளிடமிருந்தும் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை" என்று குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையில், இறுதிப் பட்டியலை மாநில அரசு இன்னும் வெளியிடவில்லை என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், விண்ணப்பித்த பிறகும் குறுஞ்செய்தி மெசேஜ் வராததால், தொகை கிடைக்காது என பெண்கள் அச்சமடைந்தனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் பேசுகையில், “சில சர்வர் சிக்கல்கள் காரணமாக சிலருக்கு ஒப்புகைச் செய்தி கிடைக்கவில்லை, ஆனால் அவர்களின் விண்ணப்பம் செயல்பாட்டில் உள்ளது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“