/indian-express-tamil/media/media_files/2025/09/29/villupuram-anganwadi-job-denied-family-of-differently-abled-person-try-set-fire-in-front-of-collectors-office-tamil-news-2025-09-29-15-58-47.jpg)
அங்கன்வாடி பணி மறுக்கப்பட்ட நிலையில், அதனை வழங்க கோரி மாற்றுத்திறனாளி குடும்பத்துடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா மேல் அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வெங்கடேசன் (வயது 37). இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவர்களுக்கு கீதஸ்ரீ (வயது 7), குணஸ்ரீ (வயது 4), தேவஸ்ரீ (வயது2) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான வெங்கடேசன் மனைவி லட்சுமிக்கு அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்
இதற்கான பயிற்சி தேர்வு எல்லாம் முறையாக முடித்துவிட்டு பணி வழங்கும் நேரத்தில், 'நீங்கள் வெளியூர் உங்களுக்கு இங்கு வேலை இல்லை' என்றும், 'உங்களுக்கு இந்த பணி வழங்க முடியாது' என்றும் என ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதை அடுத்து இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு பொதுமக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர்.
அப்போது, தனக்கு மறுக்கப்படும் அங்கன்வாடி ஆசிரியர் பணி வழங்கிட வேண்டினர். மேலும், தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெய்யை தனது குடும்பத்தில் உள்ள அனைவரது தலையிலும் ஊற்றி குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். உடனடியாக அங்கு பணியில் இருந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரைக் கொண்டு வந்து அனைவரது உடலிலும் ஊற்றி முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.