பாபு ராஜேந்திரன் - விழுப்புரம் மாவட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க அரசை கண்டித்து விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் டாக்டர் ப.சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு எம்.பி கலந்து கொண்டு பேசினார்கள். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா.இலட்சுமணன், அன்னியூர் சிவா, நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தில் டாக்டர் கனிமொழி பேசுகையில், "2018 -19 ஆண்டு நாம் 100 ரூபாய் மத்திய அரசுக்கு வரி கட்டினால் அந்த ஆண்டில் வெறும் 27 ரூபாய் தான் திரும்ப வந்தது. அதேபோன்று, 2019-20 வெறும் 24 ரூபாய் தான் திரும்ப வந்தது. 2021-22 ஆண்டு வெறும் 28 ரூபாய் தான் திரும்ப வந்தது.
2023-24 இந்த ஆண்டு 26 ரூபாய் மட்டுமே திரும்ப வந்தது. ஆனால், பா.ஜ.கஆளுகின்ற உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டும் 100 ரூபாய் வரி கட்டினால் மத்திய அரசு 220 ரூபாய் திரும்ப கொடுக்கிறது. இதை நாம் எங்கே போய் சொல்ல வேண்டும் என்பதே தெரியவில்லை, யாரிடம் முறையிடுவது என்றும் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“