Advertisment

அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல்: விழுப்புரத்தில் அரசு டாக்டர்கள் சங்கம் போராட்டம்

மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து சம்பவத்தைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
villupuram govt doctors protest for chennai Guindy hospital Dr Balaji stabbed Tamil News

மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து சம்பவத்தைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவ மனையில் புற்றுநோய் துறை பேராசிரியரும், மருத்துவருமான பாலாஜி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுதும் மருத்துவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

Advertisment

இந்நிலையில், மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து சம்பவத்தைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசரமில்லா அறுவை சிகிச்சை ஆகியவை புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

இதில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தினை வலுப்படுத்த வேண்டியும்,  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடைப்பெற்றது. அதனைதொடர்ந்து இன்று விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் இந்திய மருத்துமாநில நர்ஸிங் ஹோம் போர்டு பொருளாளர் மரு திருமாவளவன், விழுப்புரம் மாவட்ட தலைவர் மருத்துவர் தங்கராஜ், செயலாளர் மருத்துவர் சௌந்தர்ராஜன்,
மருத்துவர் சிவக்குமார், மருத்துவர் பஷீர் அஹமது மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் விழுப்புரம் தலைவர் மருத்துவர் சம்பத், செயலாளர் வினோத், பொருளாளர் பிரகாஷ், மற்ற அரசு மருத்தவர்கள் , பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், மாணவர்கள், செவிலியர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Villupuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment