/indian-express-tamil/media/media_files/2025/10/23/villupuram-police-arrest-3-for-smuggling-117-kg-of-gutka-seized-tamil-news-2025-10-23-19-57-39.jpg)
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே போலீசாரின் சோதனையில் பெங்களூரில் இருந்து சரக்கு வாகனத்தில் 117 கிலோ குட்கா கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவின் பேரில், திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி, காவல் உதவி ஆய்வாளர்கள் சண்முகம், அன்பழகன், செந்தில்முருகன் மற்றும் காவலர்கள் தலைமையில் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.கொளத்தூர்-பூசாரிபாளையம் கூட்ரோட்டில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை செய்ததில் அவர் திருக்கோவிலூர் தாலுகா எம்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் முருகன் (46) என்பதும், இவர் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் விற்பனைக்காக எடுத்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தியதில் போலீசாரின் சோதனையில் அவ்வழியாக அப்போது வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் அதில் பெங்களூரில் இருந்து விற்பனைக்காக எடுத்துவரப்பட்ட ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான சுமார் 177 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் கண்டுபிடித்து கைப்பற்றினர்.
விசாரணையில் திருவெண்ணைநல்லூர் தாலுகா ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் கண்ணதாசன் (29),
அன்ராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி கிருஷ்ணன் என்பவரின் மகன்சங்கர் (48) என்பவரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 177 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட டாடா ஏஸ் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவைகளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர், 3- பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us