/tamil-ie/media/media_files/uploads/2019/02/a672.jpg)
viluppuram aiadmk MP Rajendran dies in car accident - விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் சாலை விபத்தில் காலமானார்!
திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. எஸ்.ராஜேந்திரன்(62) மரணமடைந்தார்.
நேற்று மாலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த விருந்தில் ராஜேந்திரன் கலந்து கொண்டார். இதையடுத்து, இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனது சொந்த வேலை காரணமாக காரில் ஜக்காம்பட்டியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். கூட்டேரிப்பட்டு அருகே சென்றபோது சாலையில் இருந்த தடுப்புச் சுவர் மீது அவரது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
இவர் 2014ம் ஆண்டு விழுப்புரம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.