/indian-express-tamil/media/media_files/2025/06/06/7oJiFTpIMv1Ybxswmj8R.jpg)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியக்கோட்டை நகரில் உள்ள ஓடை தெருவைச் சேர்ந்த 32 வயதான தியாகராஜன், ஐதராபாத்தில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். அண்மையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் திண்டிவனம் திரும்பிய தியாகராஜன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டும் இதே கொரோனா தொற்றால் அவரது தந்தை ரகுபதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான முதல் கொரோனா மரணம் இதுவாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.