Advertisment

பொன்முடி வீட்டில் ரெய்டு: குவியும் தி.மு.க-வினர்; வீடியோ காட்சிகள்

அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

author-image
WebDesk
Jul 17, 2023 14:52 IST
New Update
Viluppuram: TN Minister Ponmudi house ED Raid, DMK cadre - police

அமைச்சர் பொன்முடி மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணி தங்கியிருந்த வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்

Advertisment

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரம் சண்முகபுர காலனி பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் இரண்டு கார்களில் ஒரு பெண் அமலாக்கத்துறை அதிகாரி உட்பட 8 பேர் வந்து உள்ளனர். தற்போது சோதனை நடைபெற்று வருகிறது அவருடைய மகன் கள்ளக்குறிச்சி எம்.பி கௌதம சிகாமணி பக்கத்தில் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சூர்யா கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது.

கப்பியாம்புலியூர் உள்ள சிகா பள்ளிகளிலும் சோதனை நடைபெற போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ஏராளமான தி.மு.க.-வினர் வர தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Tamilnadu #Ponmudi #Villupuram #Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment