நாடு முழுவதும் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கோயில்களுக்கு சென்றும், வீடுகளில் பூஜை செய்தும் மக்கள் வழிபடுவர். அதோடு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்தும், 3 நாட்களுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறுகளில் கரைப்பது வழக்கம்.
அந்த வகையில், சென்னை, தாம்பரம், ஆவடி காவல் நிலைய எல்லையில் மொத்தம் 4000 விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டுகளில் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்தாண்டும் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் கூடுதல் சிலைகள் வைக்க அனுமதிக்க கோரி பலர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியின் போது எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சென்னை, தாம்பரம், ஆவடி பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“