Advertisment

விநாயகர் சிலை பிரதிஷ்டை குறித்து காவல்துறை ஆலோசனை; வெளிநடப்பு செய்த ஹிந்து முன்னணியினர்

தமிழகம் மட்டுமல்லாது வடமாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் எதிர்வரும் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை மாநிலம் முழுவதுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது.

author-image
WebDesk
New Update
ஆலோசனை

விநாயகர் சிலை பிரதிஷ்டை

தமிழகம் மட்டுமல்லாது வடமாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் எதிர்வரும் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை மாநிலம் முழுவதுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது.

Advertisment

 இந்தநிலையில்,  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மண்டபத்தில் மாநகர காவல்துறை சார்பில், மாநகரில் வருகின்ற 18-ம் தேதியன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா சிலை பிரதிஷ்டை மற்றும் 20-ம் தேதி நடைபெற உள்ள சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது பிரச்சனைக்குரிய இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள முக்கிய சந்திப்புகள், ஊர்வலம் தடையில்லாமல் விரைவாக செல்லவும், நிகழ்ச்சியின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நிகழ்ச்சியை நடத்திட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் மாநகர காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில், திருச்சி மாநகர காவல் ஆணையர் .காமினி பேசுகையில்; திருச்சி மாநகரில் வருகி்ற 18-ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 20-ந்தேதி நடைபெற உள்ள சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, விநாயகர் சிலைகள் 10 அடிக்குமேல் இருக்கக்கூடாது, அரசியல் கட்சிகள் மற்றும் சாதி தொடர்பான பேனர்கள் வைக்கக்கூடாது.

  விழா நடைபெறும் இடத்தில் ஒலிபெருக்கி காலை, மாலை ஆகிய நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது, சிலைகளை மாட்டுவண்டி, மீன்பாடி வண்டி, 3 சக்கர வாகனங்களில் எடுத்து வரக்கூடாது, சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். புதிய வழிதடத்தில் செல்லக்கூடாது.

 சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும், ஊர்வலத்தின் போது எவ்வித கோஷமும் போட அனுமதிக்க கூடாது, சிலை கரைக்கும் போது தேவையற்ற பொருட்களை சிலையுடன் சேர்த்து கரைக்கக்கூடாது. சிலையை கரைத்த பின் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து யாரும் பயணிக்க கூடாது.

ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது, விநாயகர் சிலை நிறுவுவதற்கும் மற்றும் கரைப்பதற்கும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி விழா நிர்வாகிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

 மேலும், கூட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தின்போது, அதன் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. விநாயகர் சிலை நிறுவுவதற்கும் மற்றும் கரைப்பதற்கும் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறவண்ணம் நிகழ்ச்சி நடைபெற விழா நிர்வாகிகள் காவல்துறையினருக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.

 இக்கூட்டத்தில் ஹிந்து முன்னணி நிர்வாகி போஜராஜன் பேசியபோது; விநாயகர் சதுர்த்தியின்போது பிரதிஷ்டை செய்யப்படும். விநாயகரை திருமேனி என்று தான் குறிப்பிட வேண்டும்.

மேலும், மின் இணைப்பு பந்தல் அமைத்தல் ஒலிபெருக்கி அமைத்தல் போன்றவற்றை குறிப்பிட்டு மட்டுமே காவல்துறை அனுமதி கேட்கப்படும். திருமேனி வைத்து வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டு உரிமை.

எனவே, அதற்கு அனுமதி காவல்துறையினரிடம் கேட்க முடியாது என்று தெரிவித்தார். அதை காவல்துறை அதிகாரிகள் தரப்பில் ஏற்றுக் கொள்ளாததால் ஹிந்து முன்னணியினர் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்று விட்டனர்.

கூட்டத்தில் காவல்துறை துணை ஆணையர்கள், அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

vinayagar chaturthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment