இந்து கடவுளான விநாயகர் பெருமானை வழிபடுவதற்கான விநாயகர் சதூர்த்தி தினம் செப்டம்பர் 7-ம் தேதி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதூர்த்தி நாளில், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர்க் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அந்த விநாயகர் சிலைகள் காவல்துறை வழிகாட்டுதலுடன் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
அதன்படி, சென்னையில் விநாயகர் சதூர்த்திக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளது.
சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
*அனுமதித்த நாளில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும்.
*அனுமதி தரப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.
*4 இடங்களில் கரைக்க 17 வழித்தடங்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும்.
*சிலை ஊர்வலத்தில் கட்டுப்பாடுகளை மீறினாலோ, அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
*சென்னை நகர எல்லையில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 15-ல் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*சிலை கரைப்புக்கு 16,500 காவல்துறையினர், 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“