நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்.7-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சிலைகள் இன்று (செப்.15) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது.
இதையொட்டி இன்று சென்னையில் சிலப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு 15.09.2024 ஞாயிற்றுகிழமையன்று சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் ஸ்ரீனிவாசபுரம், பட்டினம்பாக்கம் கடலில் கரைப்பதற்காக கொண்டுவரப்படும்.
இதை முன்னிட்டு காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலையில் பாதசாரிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப தேவைப்படும் பட்சத்தில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
1. விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக திருவல்லிக்கேணியிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் மெதுவாக சென்று, காந்தி சிலையிலிருந்து வலதுபுறமாக ஆர்.கே. சாலை வி.எம் தெரு - இடது சந்திப்பு - அமிர்தஜன் சந்திப்பு - டிசெல்வா சாலை வாரன் சாலை - வலது - டாக்டர்.ரங்கா சாலை பீமனா கார்டன் சந்திப்பு - இடது திருப்பம் - சிபி ராமசாமி சாலை செயின்ட் மேரிஸ் சந்திப்பு - காளியப்பா சந்திப்பு -இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ ஆர்.கே.மட் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
2. விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக சாந்தோம் சாலை வழியாக வெளிச்செல்லும் வாகனங்கள், காந்தி சிலையிலிருந்து வலதுபுறம் ஆர்.கே. சாலை வி.எம். தெரு இடது - Luz சந்திப்பு - அமிர்தஜன் சந்திப்பு - டி செல்வா சாலை வாரன் சாலை வலது டாக்டர்.ரங்கா சாலை - பீமனா கார்டன் சந்திப்பு இடது திருப்பம் - சிபி ராமசாமி சாலை - செயின்ட் மேரிஸ் சந்திப்பு - காளியப்பா சந்திப்பு இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ ஆர்.கே. மட் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
4. ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்புக்கு அருகில் வரும்போது, ஜாம் பஜார் P.S- லிருந்து எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. ரத்னா கஃபே சந்திப்புக்கு பதிலாக இந்த வாகனங்கள் ஜானி ஜான் கான் சாலையை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
4. இந்த ஊர்வலம் டி.எச்.ரோடுக்குள் நுழையும் போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக இந்த வாகனங்கள் பெசன்ட் சாலை காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் GRH சந்திப்பை நோக்கி சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
5. மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
6.லைட் ஹைவுஸ் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.
7. விநாயகர் சிலையினை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை” என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.