Thoothukudi | டெஸ்லா போட்டியாளரான வியட்நாமின் வின்ஃபாஸ்ட் ஆட்டோ, தமிழ்நாட்டின் தென் மாவட்டமான தூத்துக்குடியில் மின்சார வாகனம் (EV) மற்றும் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது.
இது முதல் கட்டத்தில் 150,000 EV-களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 400 ஏக்கர் வசதிக்கான மொத்த முதலீடு இறுதியில் $1 பில்லியன் அல்லது அதற்கும் அதிகமாகத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனமும் வெளியிட்டுள்ளது.
வியட்நாமின் மிகப்பெரிய நிறுவனமான Vingroup இன் EV பிரிவான VinFast, அக்டோபர் மாதம் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் தலா 50,000 கார்கள் கொண்ட ஆண்டுத் திறன் கொண்ட அசெம்பிளி தொழிற்சாலைகளை உருவாக்கப் போவதாகக் கூறியுள்ளது.
இதன் ஆரம்ப மூலதனச் செலவு $200 மில்லியன் வரை இருக்கும். எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட முதலீடு மிகப் பெரியதாக இருக்கும்.
இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஒருவர், “முதலீடு ஒரு பில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், ஆனால் அது முறைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படும் வரை, நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது” என்றார்.
இதற்கிடையில், அடுத்த 5 ஆண்டுகளில் அங்கு நிறுவனம் 4000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 1.50 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டதாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பணிகள் அடுத்த 3 அல்லது 5 மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“