NIA Officials Searching In Six Districts Of TN : ஐ.எஸ்.ஐ.எஸ் - ஹிஸ்புத் தஹ்ரிர், இயக்கத்திற்கு ஆதரவாக பேஸ்புக் பதிவு வெளியிட்டது தொடர்பான வழக்கில், மத்திய புலனாய்வு நிறுவனம் தமிழகத்தில் ஆறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளதாக என்ஐஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வன்முறை மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில், பேஸ்புக் பதிவை வெளியிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல்லா என்கிற சரவன்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளின் தங்கும் இடம் குறித்து தஞ்சாவூர், மதுரை, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக என்.ஐ.ஏ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேடுதலின்போது மொபைல் போன்கள்,, ஹார்ட்டிஸ்க்குகள், மெமரி கார்டுகள், பென்டிரைவ்கள், வேப்டாப் மற்றும் குற்றச்சாட்டுக்குரிய பொருட்கள் அடங்கிய பல கையேடுகள் உள்ளிட்ட 22 டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அப்துல்லா பேஸ்புக் பக்கத்தில் வன்முறை தூண்டும் வகையிலும், இந்தியாவுக்கு எதிராக போரை நடத்த மத அடிப்படையில் மக்களைத் தூண்டும் விதமாகவும், பதிவுகள் வெளியிட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த பதிவுகள் இந்தியாவின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருப்பதாக கூறி மதுரையில் உள்ள தெப்பாகுளம் காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர் குறித்து என.ஐ.ஏ விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஹிஸ்புல்-தஹ்ர் என்ற இயக்கத்தின் ஆதரவாளர் என்பது தெரிய வந்துள்ளது என்று மத்திய நிறுவனத்தின் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் வன்முறை ஜிஹாத் நடத்த மற்றவர்களைத் தூண்டிவிடும் நோக்கத்திலேயே அவர் தனது பேஸ்புக் பதிவுகள் வெளியிட்டுள்ளார் என்று என்ஐஏ குற்றம் சாண்டியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil