New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Madras-HC-9.jpg)
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில் மாணவன், மாணவி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்ட சிதம்பரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 16 வயது பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டுவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகின. செப்டம்பர் 2-ம் தேதி நடந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிகம் பகிரப்பட்டது. இதை வீடியோ பதிவு செய்து வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தநிலையில், அக்டோபர் 10-ம் தேதி மாணவன் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் மாணவியை வீட்டிலிருந்து அழைத்து அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர், மகளை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தனர். இந்த மனு இன்று (நவம்பர் 5) நீதிபதிகள் பிரகாஷ், டீகாராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மாணவியை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் செயலுக்கு கண்டனம். முழுமையாக விசாரணை செய்யாமல் நடவடிக்கை எடுத்ததற்கு அதிருப்தி, அவசர கதியில் மாணவியை தங்க வைத்த குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் நகர போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.