எப்படி இப்பவும் இவ்வளவு இளமையா இருக்கீங்க? முதல்வருடன் பொதுமக்கள் ஜாலியான உரையாடல்

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் , என்றும் மார்க்கண்டேயன்.. எங்கள் முதல்வர். இன்று காலை நடைபயிற்சியின் போது பொதுமக்கள் புகழாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

MK stalin, Tamil Nadu, viral video

நமக்கு நாமே என்ற திட்டம் துவங்கி 2016 தேர்தல் மற்றும் 2021 தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் எளிதில் அணுகும் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நடைப்பயிற்சி, சைக்கிளிங், உடற்பயிற்சி என்று தன்னுடைய ஆரோக்கியத்தை எப்போதும் பேணிக் காக்கும் அவர், மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார். இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, பொதுமக்களை சந்தித்து பேசிய முதல்வரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்று காலை சென்னை அடையாறு தியோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் அங்கு நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்களிடம் உரையாடினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் முதல்வராக வருவீர்கள் என்று எனக்கு தெரியும். நான் உங்களை ஒருமுறை ஏர்போர்ட்டில் வைத்து சந்தித்தேன்” என்று தன்னுடைய உரையாடலை பெண்மணி ஒருவர் துவங்கினார். ”மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றீர்கள்; நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். இந்த ஆட்சி தொடர வேண்டும் சார்” என்று அந்த பெண் தொடர்ந்து பேசினார்.

ஸ்பெயின் நாட்டிற்கு கால்பந்து விளையாட சென்றிருக்கும் உங்களின் பேரன் வெற்றி பெற வேண்டும் என்று அருகில் இருக்கும் மற்றொரு பெண் கூறினார். இவர்களிடம் இயல்பாக முதல்வர் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, என்றும் மார்க்கண்டேயனாக எப்படி இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்ப, அனைவரும் மகிழ்ச்சியில் சிரிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அதற்கு பதில் அளித்த முதல்வர், தான் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதாக தெரிவித்தார். நாங்கள் அதனை யுடியூபில் பார்த்தோம் என்று அதற்கு பதில் தெரிவித்தார் அந்த பெண்மணி. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் , என்றும் மார்க்கண்டேயன்.. எங்கள் முதல்வர். இன்று காலை நடைபயிற்சியின் போது பொதுமக்கள் புகழாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral video of people praising mk stalin as markandeyan

Next Story
understand? புரிஞ்சுதா? கூட்டணிக் கதவை இழுத்து மூடிய ராமதாஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com