Advertisment

'சென்னைல இருந்து வர்ற யாருக்கும் உதவ கூடாதுங்க’ - வைரலாகும் தண்டோரா!

அரசு எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் முயற்சிகள் அனைத்தும் வீண் தான் என்பதை உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும் மக்களே!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viral video of Thandora man orders villagers should not help Chennai people

Viral video of Thandora man orders villagers should not help Chennai people

Viral video of Thandora man orders villagers should not help Chennai people : சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகின்ற சூழலால், அச்சமடைந்த பொதுமக்கள் பலரும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் ஈ-பாஸ் கிடைக்காத பலரும் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நிலையில் கிராமங்களில், சொந்த மக்களை வரவேற்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் – முதல்வர் பழனிசாமி பேட்டி

சமூக வலைதளத்தில் வைரலாய் பரவி வரும் வீடியோ ஒன்றில் "சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் மக்களுக்கு கிராம மக்கள் உதவி புரிய கூடாது. அதனையும் மீறி உதவி புரிந்தால் நிச்சயமாக தண்டிக்கப்படுவீர்கள். மாவட்ட ஆட்சியர் உத்தரவு இது” என்று தண்டோரா போட்டு செல்கிறார் தண்டோராக்காரர்.

சென்னையில் இருந்து வெளியே வரும் மக்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளது. மேலும் பலர் போலி ஈ-பாஸ் மூலம் தலைநகரை விட்டு வெளியேறும் சூழல் நிலவி வருகிறது. அரசு எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் முயற்சிகள் அனைத்தும் வீண் தான் என்பதை உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும் மக்களே!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment