விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக துணை தலைவராக பாண்டியன் என்பவர் உள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு மகனுக்கு ரயில்வேயிலும் மற்றொரு மகனுக்கு கப்பல் துறைமுகத்திலும் அரசு வேலை வாங்கித் தருவதாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ், செயலாளர் கலையரசன் 2011 ஆம் ஆண்டு ரூ.11 லட்சத்தை பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் கொடுத்த வாக்குறுதியின் படி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ் மற்றும் கலையரசனை கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக சொந்தக் கட்சியினரிடமே பாஜக மாவட்ட தலைவர் ஏமாற்றி இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil