New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/26/vn-collector-2025-06-26-21-02-15.jpg)
கடந்த இரண்டு ஆண்டு காலம் விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றியது எண்ணி பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அம்மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து தன் கைப்பட எழுதிய கடிதம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டு காலம் விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றியது எண்ணி பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அம்மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து தன் கைப்பட எழுதிய கடிதம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயசீலன் எழுதியுள்ள கடிதத்தில் தான் கலெக்டராக வேண்டும் என்ற கனவு பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுதே தோன்றியதாகவும் அதன் பின் கல்வி மற்றும் கடின உழைப்பின் மூலமாக இந்த இடத்திற்கு வந்திருந்ததாகவும் கடந்த இரண்டு ஆண்டு காலம் விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றியது எண்ணி பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இன்னும் பல மடங்கு உயர்ந்து செழிப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயசீலன் கடிதம் எழுதியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயசீலன், தற்போது சென்னை மாநகராட்சி இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடைபெறும் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் தனது கைப்பட எழுதிய கடிதத்தில் எழுதியிருப்பதாவது: “கலெக்டராக வேண்டும் என்ற கனவு பத்தாம் வகுப்பில் வந்தது. கல்வி மற்றும் கடும் உழைப்பின் வழியாக ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த பொறுப்புகளுக்குப் பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றியதை எண்ணிப் பெருமை கொள்கிறேன்.”
விருதுநகர் மாவட்ட தொழில், வேளாண்மை, வர்த்தகத் துறைகளில் கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்த்திய வளர்ச்சி இம்மக்களின் உழைப்பின் சிறப்பை விளக்குகிறது. கல்வி, உயர்தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தில் நம் மாவட்டம் இன்றும் பல மடங்கு உயர்ந்து செழிப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மாவட்டத்தின் அமைச்சர்கள், சக அலுவலர்கள், சார்நிலைப் பணியாளர்கள் நேர்முக உதவியாளர்கள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதை மகிழ்வோடு நினைவுகூர்கிறேன்.
விருதுநகர் மாவட்டத்தின் அன்பு மக்களுக்கும், என் பணிக்காலத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும், குடும்பத்தினர்க்கும் என் அன்பு கலந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.