விருதுநகர் மாவட்டம் காரிசேரியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரிசேரியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா விழா ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில், பெரும் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவிழாவையொட்டி கோவிலில் மைக் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மைக்செட் உரிமையாளர் திருப்பதி (வயது 28), மைக் வயரை கட்டும்போது தவறுதலாக உயர் மின்னழுத்த கம்பி மீது வயர் செட் பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மின்சாரம் உடல் முழுவதும் பாய்ந்ததில், அவரும், அருகில் இருந்த அவரது மனைவி லலிதா (25) மற்றும் பாட்டி பாக்கியம் (65) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். காப்பாற்ற முயன்ற இருவரும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரிசேரி பகுதியை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் பாதுகாப்பிற்கான மின் ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாடுகளுக்கு முன் தேவையான பரிசோதனைகள் நடைபெறவில்லை என்பது போன்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.