விருதுநகர் மாவட்டம் கோவில்புலி அருகே உள்ள குத்தியில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் நேற்று (பிப்ரவரி) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர், வெடிவிபத்து தொடர்ந்து நீடித்த காரணமாக தீயை அணைக்கும் பணியில் சிரமங்களை எதிர்கொண்டனர். ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் ராமலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். மேலும், ஒரு ஆண் உட்பட ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், ஆலையை ஐந்து பேருக்கு உள் குத்தகையாக வழங்கி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரித்தது விபத்துக்கான காரணமாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.