/indian-express-tamil/media/media_files/2025/09/13/virudhunagar-govt-medical-college-doctor-achieve-successful-brain-surgery-to-7-year-old-boy-tamil-news-2025-09-13-19-23-51.jpg)
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை மூளைக் கசிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு மண்டையோட்டை திறந்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை மூளைக் கசிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு மண்டையோட்டை திறந்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் ஜெயசிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வத்திராயிருப்பு செம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டனின் மகன் பாலபிரசாத் (7), கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மூளைக் காய்ச்சலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மீண்டும் மீண்டும் மூளைக் காய்ச்சல் ஏற்படும் காரணத்தை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டதில், மூளைக்கும் மூக்கின் எலும்புப் பகுதிக்கும் இடையே துவாரம் இருப்பதும், அதன் வழியாக அடிக்கடி தொற்று ஏற்படுவதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கணபதிவேல் கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள துவாரத்தை வெற்றிகரமாக மூடியுள்ளனர்.
இத்தகைய அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சிறுவன் முழு ஆரோக்கியத்துடன் உள்ளார்." என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us