Advertisment

Virudhunagar Lok Sabha Election Results 2024: கடும் போட்டிக்கு இடையே விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. 1977ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார் எம்ஜிஆர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manickam Tagore Won congress

Virudhunagar Lok Sabha 2024 Result

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Virudhunagar Election Results 2024 Live Updates: விருதுநகர் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 34வது தொகுதி ஆகும். பெருமளவு வறட்சியான பகுதிகளை கொண்ட இடம் என்பதால் இங்கு விவசாயம் குறைவுதான்.

Advertisment

பட்டாசு, தீப்பெட்டி, பிரிண்டிங், நூற்பு ஆலைகள் என முக்கிய தொழில்கள் நடைபெறும் விருதுநகரும், சிவகாசியும் இந்த தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது. இந்த தொழில்களை சார்ந்து தான் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் உள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் இது சிவகாசி மக்களவைத் தொகுதியாக  இருந்தது. 2008-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் விருதுநகர் மக்களவைத் தொகுதியாக ஆனது.

இதற்கு முன்பு இது சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தபோது, 1961 முதல் 2004 வரையில் 11 மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது.

அதில் அதிமுக 4 முறையும், மதிமுக 3 முறையும், காங்கிரஸ், சுதந்திரா கட்சி, சிபிஐ ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் 2009, 2014, 2019 என மூன்று முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 2009, 2019 ஆகிய இருமுறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளன..

காமராஜர், எம்ஜிஆர் வென்ற தொகுதி

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. 1977ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார் எம்ஜிஆர்.

முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர், இந்த மாவட்டத்துக்குட்பட்ட சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

2019 மக்களவை தேர்தல்

2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில், தேமுதிக வேட்பாளர் 3.50 லட்சம் வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவரைவிட 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

வாக்காளர்கள் விவரம்

இந்த மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14,91,695 வாக்காளர்கள் உள்ளனர்

ஆண்கள்- 7,28,158

பெண்கள்- 7,63,335

3-ம் பாலினத்தவர்- 202

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்    

திமுக- மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)

அதிமுக- விஜய பிரபாகரன் (தேமுதிக)

பாஜக- ராதிகா

நாம் தமிழர்- கவுசிக்

இவர்களுடன் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

குறிப்பாக விருதுநகர் தொகுதியில் 2009, 2019 ஆகிய 2 முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் தற்போது மீண்டும் களமிறங்கினார்.

தேர்தல் முடிவுகள் 2024

மாணிக்கம் தாகூர்- 385256

விஜய பிரபாகரன்- 371092

ராதிகா சரத்குமார்-160523

கெளசிக்- 74614

இதன்மூலம் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம் தாகூர் 14164 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் 2024

மாணிக்கம் தாகூர்- 385256

விஜய பிரபாகரன்- 371092

ராதிகா சரத்குமார்-160523          

கெளசிக்- 74614

இதன்மூலம் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம் தாகூர் 14164 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment