விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன முழுமையான பானைகள், தட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவபொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள் வட்ட சில்லு, தங்க மணி, சூது பவளமணி உள்ளிட்ட 2900 பொருட்கள் கிடைத்தன. தற்போது சுடு மண்ணால் ஆன முழுமையான பானைகள், தட்டுகள் கிடைத்துள்ளன.
/indian-express-tamil/media/post_attachments/0ca1d145-2d1.jpg)
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், முன்னோர்கள் இப்பகுதியில் தொழிற் கூடங்கள் நடத்தி வாணிபத்தில் ஈடுபட்டதற்கு சான்றாக பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. முழுமையான பானைகள், தட்டுகள் தற்போது கிடைத்துள்ளன. இவை சமைப்பதற்கு, சாப்பிடுவதற்கு பயன்பட்டுள்ளது என்றார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“