scorecardresearch

‘விடுதலை’ படம் பார்க்க குழந்தையோடு சென்ற பெண் மீது வழக்குப் பதிவு.. தியேட்டரில் நடந்தது என்ன?

தியேட்டர் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

theatres

சென்னையில் உள்ள மில்டிப்ளெக்ஸ் திரையரங்கில், குழந்தையுடன் A சான்றிதழ் படத்திற்கு செல்லவேண்டும் என்று சர்ச்சை கிளப்பிய பெண் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வகைப்பாடு வாரியத்திடம் A சான்றிதழ் வாங்கிய திரைப்படத்திற்கு (பெரியவர்கள் மட்டும் பார்க்க அனுமதி), குழந்தைகளுடன் பெற்றோர்கள் திரையரங்கிற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் வளர்மதி என்பவர், தன்னுடன் குழந்தையை அழைத்து வந்ததால் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திரைப்பட ஊழியர்களிடம் வளர்மதி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனால், தியேட்டர் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வளர்மதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Virugambakkam police filed case against activist