Advertisment

இனி விசா வேண்டாம்… இலங்கைக்கு செல்லலாம்: புதிய அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
visa

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது.

Advertisment

எந்த நாட்டில் வசித்தாலும், மற்ற நாட்டுக்கு செல்லும்போது விசா மிகவும் முக்கியம். சுற்றுலாவிற்காகவோ அல்லது வேலைக்கு செல்லவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்கு வெளிநாடு  செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தால் அதற்கு ஏற்றவாறு விசாவை நாம் பெற வேண்டும்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கை  செல்ல இனி விசா தேவை இல்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இலங்கைக்கு விசா எடுக்காமல் சென்று வரலாம்.

மேலும் சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 6 நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த திட்டம் மார்ச் 31 தேதி வரை  சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது என்றும் அறிவித்துள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment