Advertisment

பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு சாலையோரம் பிரசவம் பார்த்த எழுத்தாளர்!

லாக்கப் நாவல் மூலமாக தமிழ் சினிமாவில் கால்பதித்தவர். வெற்றிமாறன் இயத்தில் அந்த  கதை, விசாரணையாக உருப்பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Visaranai lockup writer Chandrakumar helped pregnant woman

Visaranai lockup writer Chandrakumar helped pregnant woman

Visaranai lockup writer Chandrakumar helped pregnant woman : கோவையின் சிங்காநல்லூர் பகுதி காமராஜர் சாலையில் உள்ளது துளசி லே அவுட். நிறைய வட இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானோர், ரயில்வே கேட் அருகே கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். அங்கு தங்கியிருந்த 26 வயது பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

Advertisment

போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு அருகே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு ஆட்டோ ஓட்டும் சந்திரனுக்கு இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு அங்கே சென்றுள்ளார். ஆனால், ஏற்கனவே அந்த பெண்ணின் பணிக்குடம் உடைந்து, இரத்தப் போக்குடன் காணப்பட்டார். அப்பெண்ணுக்கு யாரும் உதவ முன்வராத நிலையில், ஆட்டோ சந்திரன் உதவ முயன்றுள்ளார். அவரை யாரும் அருகே விடவில்லை.

மேலும் படிக்க : 20.3 கோடி பார்வைகள்… உலக சாதனை படைத்த மோடி வீடியோ!

இந்நிலையில் அவர் இந்தியில் பேசி நிலைமையை கூறவும், அவரை உதவி செய்ய அனுமதித்துள்ளனர். ஆட்டோ சந்திரன், அப்பெண்ணுக்கு சாலை ஓரத்திலேயே பிரசவம் பார்த்துள்ளார். தாயையும் சேயையும் தக்க நேரத்தில் காப்பாற்றியுள்ளார் அவர்.

Visaranai lockup writer Chandrakumar helped pregnant woman இது தொடர்பாக சந்திரகுமாரின் மகள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு

அந்த நேரத்தில் வந்த 108 அவசர வாகனத்தில் இருக்கும் மருத்துவ பணியாளர்கள் தொப்புள் கொடியை அறுத்து, இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த லாக்டவுன் காலத்தில் மறக்கவே முடியாத தருணம் இது தான் என்று தன்னுடைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் கருத்து பதிவிட, என்னவென்று கேட்ட போது அவர் இதனை கூறினார். தற்போது தாய் சேய் இருவரும் மிக்க நலமாக உள்ளனர்.

கோவை ஹோப்ஸ் அருகே, ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார் எழுத்தாளர் சந்திரகுமார். லாக்கப் நாவல் மூலமாக தமிழ் சினிமாவில் கால்பதித்தவர். வெற்றிமாறன் இயத்தில் அந்த  கதை, விசாரணை என்ற படமாக உருப்பெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment