அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டால் செருப்பால் அடிக்கும் துணிச்சல் வேண்டும்: நடிகர் விஷால்

ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும் ஒரு குழு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று நடிகர் விஷால் கூறி உள்ளார்.

ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும் ஒரு குழு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று நடிகர் விஷால் கூறி உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும் ஒரு குழு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று நடிகர் விஷால் கூறி உள்ளார். 
நடிகர் விஷால் 48 வது பிறந்த நாளையொட்டி ஆதரவற்றோர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார், “ என் பிறந்த நாளை எப்போதும் இந்த இடத்திற்கு வந்துதான் தொடங்குவேன். இவர்களை சந்திப்பது மிகப்பெரி பாக்கியம். அவர்களுடைய ஆசீர்வாதம்  மிகப்பெரிய பாக்கியம். நான் உணவு வழங்கவில்லை என்றாலும் அவர்கள் என்னை வாழ்த்துவார்கள். 
சினிமாவில் 20% பேருக்குத்தான் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பேனிக்கு சொல்கிறோம்? அவர்கள் சொல்வது உண்மையா? உண்மையில் திரைப்படம் எடுக்கிறவர்களா? என்பது குறித்து முதலில் தெளிவாகி கொள்ள வேண்டும். 
எவனாவது தவறாக நடந்துகொள்ள முயற்சி பண்ணா, முதலில் அந்தப் பெண்ணுக்கு  தைரியம் வேண்டும். அப்படி கேட்கிறவர்களை  அந்தப் பெண்மணி செருப்பால அடிக்கணும். அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் செருப்பால் அடிக்கும் துணிச்சல் வர வேண்டும். யாராக இருந்தாலும், பெண்களை இதுபோன்ற பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைக்கதாக வேண்டும். 
தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இல்லை என கூற முடியாது. காலம்காலமாக இந்த புகார்கள் உள்ளன. இங்கும் இது போல் பிரச்சனைகள் இருக்கலாம். சில உப்புமா கம்பெனிகள் ஒரு ஆபிஸ் போட்டு போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும் ஒரு குழு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” அவர் கூறினார். 

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: