தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் விஷால் பேசி உள்ளார்.
அவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் அதிக கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் அவர் “ தமிழ்நாட்டில் வசுலீக்கப்படும் ஜி.எஸ்.டி வரி குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் இரட்டை வரி வசூலிக்கும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஒரே நாடு ஒரே வரி என பிரதமராகி நீங்கள் கூறியபோது நான் உங்களை நம்பினேன். ஆனால் எதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இப்படி இரட்டை வரி வசூலிக்கப்படுகின்றது? ஏன் யாரும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பாமல் உள்ளனர்? இந்த இரட்டை வரி முறையினால் திரையுலகம் மிகவும் மோசமாக பாதிப்பைச் சந்தித்தது வருகின்றது. குறிப்பாக தயாரிபாளர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
8 % அதிகமாக உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. இப்படியான இரட்டை வரிகளால் திரையுலம் ரத்தம் சிந்திக் கொண்டுள்ளது. இந்த வருடம் திரையுலகிற்கு மிக மோசமான வருடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அவர்கள் தங்கள் இழப்புகளை மறைத்துக்கொண்டு பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
சினிமாவில் இருக்கும் நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை கேட்கவில்லை. நான் பிரதமர் மோடியை முழுமையாக நம்புகிறேன். நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த பட்ஜெட்டை நம்புகிறீர்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன்’ என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“