Advertisment

டி.என்.பி.எஸ்.சி-யில் தேர்ச்சி: பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற தாமரை

"நான் என்னைப் பற்றி ஏமாற்றமடைவது இதுவே முதல் முறை. இது எனது மனநிலையை பாதிக்கிறது”

author-image
WebDesk
New Update
TNPSC, Visually Challenged Thamarai

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி (குரூப் IV) தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர் கே.தாமரை, பணியில் சேரும் உத்தரவுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். அவரும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பிப்ரவரியில் தேர்வு உத்தரவுகளைப் பெற்றனர், ஆனால் தொற்றுநோய் பிரச்னையால் அவர்கள் பணியில் சேர தாமதமானது.

Advertisment

விமான நிலையம் புதிய விதிகள்: குவாரன்டைன் விதிவிலக்கு யார், யாருக்கு?

19 பேரில் 18 பேர் ஆகஸ்டில் பணியில் சேர ஒரு அறிவிப்பைப் பெற்றனர். ஆனால் தாமரைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அலுவலகத்துக்கு நடந்துக் கொண்டிருக்கிறார். “இந்த வியாழக்கிழமை மீண்டும் பத்தாவது முறையாக அலுவலகத்திற்குச் சென்றேன். நான் பார்வையற்றவளாக இருப்பதால், வேறு வழிகளைத் தேட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். அவர்கள் மீண்டும் திரும்பி வரக் கூடாது என்று என்னை வெளியேறச் சொன்னார்கள்” என்றார் தாமரை.

தேர்வு உத்தரவின்படி, எழுதுபொருள் மற்றும் அச்சிடும் துறையில் இளைய உதவியாளர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்ய தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டார் தாமரை. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி அவருக்கு நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர் அந்த துறைக்குச் சென்றபோது அவர்கள் அந்த உத்தரவை ஏற்க மறுத்துவிட்டதாக தாமரை கூறினார்.

“என்னிடம் தொழில்நுட்ப சான்றிதழ்கள் எதுவும் இல்லை என்றும், புத்தகப் பிணைப்புப் பணிகளைச் செய்ய எனக்கு தகுதி இல்லை என்றும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், காலியிடங்கள் இல்லை என்றும் அவர்கள் கூறினர். ஆனால் எனது பணிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார் தாமரை.

துறை அதிகாரிகளிடமிருந்து மீண்டும் மீண்டும் அவமானங்களைப் பெற்றதால், அவரது மனநிலை உடைந்துள்ளதாக தாமரை கூறினார். “நான் பார்வையற்றவள், இது எனக்கான இடம் இல்லை என்று அவர்கள் என் முகத்துக்கு நேராக அப்பட்டமாகக் கூறினர்” என்றார்.

“வளரும் போது, நான் பார்வையற்றவளாக இருப்பதால் என் பெற்றோர் என்னை ஒருபோதும் என் சகோதரர்களிடமிருந்து வேறுபடுத்தவில்லை. நான் என்னைப் பற்றி ஏமாற்றமடைவது இதுவே முதல் முறை. இது எனது மனநிலையை பாதிக்கிறது” என்று கவலையுடன் கூறினார் தாமரை.

தாமரை தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருவண்ணாமலையில் உள்ள நெடுங்கமுடியில் வசித்து வருகிறார். அவரது கணவரும் பார்வையற்றவர், தற்போது வேலையில்லாமல் இருக்கிறார். குடும்பம் இப்போது அவர்களது உறவினர்களை சார்ந்திருக்கிறது.

"இந்த வேலை எங்கள் வாழ்க்கையை மிகவும் சிறப்புற செய்யும். அதனால் தான் நான் மிகவும் கடினமாக உழைத்து 202 மதிப்பெண்களுடன் தேர்வில் தகுதி பெற்றேன். எனக்குக் கிடைத்ததைப் பெற நான் தகுதியானவள்” என்றார் தாமரை.

டக்குனு செஞ்சிடலாம்… குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச சில்லி பிரெட்!

எழுதுபொருள் மற்றும் அச்சிடும் துறை ஆணையர் ஏ. சுகந்தி, "அவரது ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளன, அதைப் பற்றி என்னால் பேச முடியாது" என்றார்.  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் கூறுகையில், “தாமரை ஒரு மனுவை அனுப்பியுள்ளார். விளக்கம் கோரி சம்பந்தப்பட்ட துறைக்கு நோட்டீஸ் அனுப்புவோம்” என்றார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment