விஜய் நாளை திருச்சியில் பிரச்சாரம்: வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் என். ஆனந்த் தரிசனம்

கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-09-12 at 12.12.28 PM

Trichy Vijay Campaign

திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் சுற்றுப்பயணத்தை நாளை (செப்டம்பர் 13) திருச்சியில் தொடங்குகிறார். முதற்கட்டமாக, டிசம்பர் 13 முதல் 20 வரை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

Advertisment

நாளை, திருச்சி மரக்கடை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை விஜய் மேற்கொள்கிறார். இதற்காக, திருச்சி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

என். ஆனந்த் ஆய்வு

இந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தார். பின்னர், விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடமான திருச்சி மரக்கடை பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

WhatsApp Image 2025-09-12 at 12.13.36 PM

WhatsApp Image 2025-09-12 at 12.13.35 PM

பெரம்பலூரில் காவல்துறை அனுமதி

முன்னதாக, பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை 21 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறினால், பிரச்சாரத்தை இடையிலேயே நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உண்டு.

Advertisment
Advertisements

பெரம்பலூரில் காமராஜர் வளைவுப் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கு பதிலாக மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின்போது ஒலி அளவு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்றும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றுவர எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி: சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: