/indian-express-tamil/media/media_files/PubxO5rsXhxv1D1krWeV.jpg)
திருநெல்வேலி மாநகராட்சியின் புதியக் கட்டடங்களிலும், பொது இடங்களிலும் தேவையற்ற வகையிலும், 1956 தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1541/29-7-1982, 349/14-10-1987, 291/19-12-1090 தமிழ் வளர்ச்சி துறை கடிதம் (ஆ.மொ) 7168/2017 நாள் 28-11-2018 ஆகிய அரசாணைகளுக்குப் புறம்பாகவும் 18-7-2017 நாளிட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் எண்-7334/2017 நீதிப் பேராணையை அவமதிக்கின்ற போக்கும் தலைதூக்கி வருகிற அவலநிலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர், மேயர், துணை மேயர் ஆகிய பெருமக்களிடம் 9 முறை நேரிலும் அஞ்சல் வழியாகவும் விண்ணப்பித்தேன்.
3 முறை ஆர்ப்பாட்டங்கள் மூலம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் எவ்வகையான திருத்த நடவடிக்கையும் இல்லை. பொறுப்பற்ற வகையில் தொடரும் மாநகராட்சி நிர்வாகத்தின் ஆட்சித் தமிழ் சட்ட அவமதிப்பு போக்கைக் கண்டித்து நாளை மறுநாள் நெல்லை வரும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் 25-10-2023 புதன் காலை 10 மணி முதல் பாளை, வி.மு.சத்திரம் புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் (தூத்துக்குடி சாலை) காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்குகிறேன்.
காவல்துறை இதற்கு பொருந்தாத காரணத்தைக் கூறி அனுமதி மறுத்துள்ளது என்றாலும் எமது போராட்டம் அறிவித்தப்படி தொடங்கும் என தெரிவித்து கொள்கிறேன் என்று வியனரசு கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.