கோவை செட்டிபாளையம் பகுதியில் நேற்று ஜனவரி 21 ஜல்லிக்கட்டு விழாவை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
Advertisment
ஆரவாரமாக இருந்த ஜல்லிக்கட்டு அரங்கு, விகே சசிகலா காளையின் என்டீரியால் திகைத்து நின்றது. அரங்கம் மட்டுமின்றி மேடையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியில் வாயடைந்து நின்றுக்கொண்டிருந்தார்.
அதிமுக கட்சி வேட்டியை அணிந்திருந்த நபர் காளையை அவிழ்த்துவிட, வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த வேகத்தை பார்த்த வீரர்கள் தெறித்துஓடினர். காளை வெற்றியை அறிவிக்காமல், அமைச்சரும், விழா நிர்வாகிகளும் நீண்ட நேரம் அமைதி காத்தனர்.
காளை வெற்றி அறிவிப்பை செந்தில் பாலாஜி அல்லது கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி இருவரில் ஒருவர் அறிவிக்க வேண்டும் என விழா கமிட்டியினர் எதிர்ப்பார்த்தனர். ஆனால், இருவரும் நீண்ட நேரம் ஆகியும் மவுனமாகவே இருந்தனர்.
இறுதியாக, சேனாதிபதி வெற்றிப்பெற்ற சசிகலாவின் காளைக்கு தங்க நாணயம் பரிசாக அளிப்பதாக அறிவித்தார். பரிசை அளிப்பதற்கும் செந்தில் பாலாஜி முன்வரவில்லை. திமுக ஐடி விங் இணை செயலாளர் ஆர் மஹிந்திரன், பரிசை வழங்கிட அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து, அமமுக தலைவர் டிடிவி தினகரின் காளை அரங்கை அதிரவைத்து, வெற்றிப்பெற்றது. இந்த முறை, தாமதமின்றி வெற்றி அறிவிப்பு உடனே வெளியானது. வெற்றிப்பெற்ற காளையின் உரிமையாளருக்கு சில்வர் பாத்திரமும், ஹாட் பாக்ஸூம் வழங்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil