VK Sasikala Take selfi : சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வாரம் டிஸ்ஜார்ச் செய்யப்பட்டதை தொடர்ந்து, கொரோனா தொற்கு காரணமாக பெங்களூரு விடுதியில் தனிமைபடுத்தப்பட்டார்.
தொடர்ந்து தனிமைபடுத்துதல் முடிந்து சசிகலா இன்று சென்னை திரும்பியுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பெங்களூருவில் இருந்து தமிழகம் வரும் பாதை அனைத்திலும் அமமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அவர் சென்னை வரும்போது அவரது காருக்கு பின்னால் 5 கார்கள் மட்டுமே வரவேண்டும் என்றும், பேனர்கள், பட்டாசு ஆகியவை பயன்படுத்த கூடாது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக தமிழக எல்லையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் காவல்துறை எச்சரிக்கையை மீறிய சசிகலா, அதிமுக கொடி பொருத்திய காரில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டார். அவருக்கு பின்னால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பின்தொடர்ந்தன. அவர் பெங்களூவில் இருந்து புறப்படும் போது, கர்நாடக அதிமுக, சார்பில், ஆரத்தி எடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா காரில் வந்துகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் சசிகலா ஆதரவாளர்கள் அவரை விரட்டியடித்துள்ளனர். இதையறிந்த சசிகலா காரை நிறுத்தி, கீழே இறங்கி அந்த இளைஞரை அழைத்து அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சசிகலா தமிழகத்தின் எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த நிலையில், அவர் காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வேறு காரில் பயணம் செய்து தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கிறார். அந்த கார் அதிமுக அடிப்படை உறுப்பினர் ஒருவரின் கார் என்பதால், அதில் இருக்கு அதிமுக கொடியை அகற்ற முடியாத நிலை உறுவாகியுள்ளது. இதற்கிடையே அனுமதி இல்லாமல் அதிமுக கொடியை பயன்படுத்திய அவருக்கு கிருஷ்ணகிரி போலீசார் தரப்பில் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தலையிட முடியாது என்று சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"