சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான ச்சிசகலா பெங்களூரில் உள்ள பார்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சிறைதண்டனை பெற்ற இவர் தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்து வரும் 27-ந் தேதி வெளியாக இருந்தார்.அவரின் விடுதலை தொடர்பான வேலைகளின் சிறை நிர்வகத்தினரும், விடுதலையாகி வரும் அவரை வரவேற்க அமமுக தொண்டர்களும் தயாராகி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தீவிர கண்கானிப்பில் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறி இருப்பதால், ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இவ்வை என தெரியவந்த்து.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதாகவும், இதனால் மூச்சுத்திணறல் அவருக்கு ஏற்பட்டு வருவதாகவும், எனவே அதற்காக அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்து தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை மற்றும் இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும், சர்க்கரையின் அளவும் மட்டும் இன்னும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூச்சுத்திணறல் காரணமாக அவரது நுரையீரல் ஸ்கேன் செய்தபோது, லேசான தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் பாதிப்பு இல்லை என்றாலும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால் தீவிர மருத்துவ கண்கானிப்பு அவசியம் எனவும், தற்போது சசிகலா உடல்நிலை சீராக இருந்தாலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தீவிரமாக கண்கான்கானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் சசிகலாவும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பாரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிமைபடுத்தப்பட்டுள்ள அவர், மருத்துவரின் தீவிர கண்கானிப்பில் உள்ளார்.
இன்னும் 5 நாட்களில் சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது அமமுக தொண்டர்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"