அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையை முடித்துவிட்டு தமிழகம் திரும்பினார். பெங்களூருவில் சென்னை வந்த அவருக்கு வழிநெடுக திரளான மக்கள் கூட்டம் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை மக்கள் கூட்டம் வாழ்த்துவதை அதிமுக அரசு பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது சசிகலா திவிர அரசியலுக்கு திரும்புவதாக உறுதியளித்தார்.
பிப்ரவரி 2017 இல் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவி ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, தாந்தான் அவருடைய உண்மையான வாரிசு என்று கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிகாரத்தை எதிர்க்க உள்ளார். சில எண்ணிக்கையில் மக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், திங்கள்கிழமை சசிகலாவை வரவேற்ற கூட்டம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட பெரியது என்று அதிமுக மூத்த தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஒப்புக்கொண்டார்.
நேற்று காலை டஜன் கணக்கான வாகனங்களுடன் அவரது கான்வாய் பெங்களூருவை விட்டு புறப்பட்டது. ஆனால், அவர் இரவு வரை சென்னையை வந்தடையவில்லை. ஏனென்றால், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் திரண்டிருந்த பெரும் கூட்டம் அவரது 340 கி.மீ பயணத்தை நீண்டதாக ஆக்கியது. பல இடங்களில் சுருக்கமாக பேசுவதை அவர் நிறுத்திவிட்டார். அதிமுக தன்னைப் பற்றி குழப்பத்தில் இருப்பதாகவும், அவர் ஒருபோதும் அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டார் என்றும் கூறினார்.
மற்றொரு இடத்தில் பேசிய சசிகலா “எதிரிகள் ஆட்சிக்கு வரக்கூடாது. எனவே, எல்லோரும் ஒரே தாயின் குழந்தைகளைப் போலவே, அதிமுக பதாகையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அவர் தீவிர அரசியலுக்குத் திரும்புவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கட்சித் தொண்டர்களுக்காக நிச்சயமாக வருவேன்” என்று கூறினார்.
உடல்நலக் குறைவால் தமிழகம் திரும்புவதை தாமதப்படுத்திய சசிகலா, “எனது அக்கா (மூத்த சகோதரி) புரட்சி தலைவி, இதய தெய்வம், அம்மாவின் தெய்வீக ஆசியால் நான் கொரோனாவிலிருந்து தப்பி வந்தேன்” என்றார்.
புகழ்பெற்ற எம்.ஜி.ஆர் பாடலான அன்புக்கு நான் அடிமை பாடலை மேற்கோள் காட்டிய அவர், பெரும் அன்பையும் பாசத்தையும் பெற்றதாகக் கூறினார்.
டிசம்பர் 2017ல் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவதற்கும் ஒன்றிணைந்தனர். அவர் தனது சகோதரி மகன் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உருவாகக் காரணமானார். திங்கள்கிழமை அவரை வரவேற்க கூடியகூட்டம் அதிமுக மற்றும் அமமுக கொடிகளை ஏந்தியிருந்தது. அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடி பயன்படுத்துவதைத் தடுக்க காவல்துறையின் முயற்சிகள் பயனற்றுப்போனது. சசிகலாவுடன் வந்த டிடிவி தினகரன், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு வருவேன் என்று கூறினார்.
முன்னதாக, அதிமுக அமைச்சர்கள் கட்சிக் கொடியைப் பயன்படுத்திய சசிகலாவுக்கு எதிராக காவல்துறைத் தலைவர் ஜே.கே.திரிபாதிக்கு மனு அளித்திருந்தனர். திங்கள்கிழமை அதிமுக மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார், சசிகலா மற்றும் தினகரனுக்கு கட்சி கொடியைப் பயன்படுத்த உரிமை இல்லை என்று கூறினார். அவர் இருவரையும் எதிர்க்கட்சியான திமுகவின் பி டீம் என்று அழைத்தார். அதிமுக தலைமையகத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு ஆதரவளித்ததற்காக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த எஸ்.ஆர்.சம்பங்கி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரை அதிமுக திங்கள்கிழமை நீக்கியது.
பராமரிப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, புதிதாக திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தை மூடி அங்கே செல்வதை தடுத்ததன் மூலம் அதிமுக அரசின் பயத்தைக் காட்டுவதாக சசிகலா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.