VK Sasikala News Live, VK Sasikala Tamil Nadu Arrival:தொடர்ந்து 23 மணி நேரம் பயணமாக நேற்று காலை தனது பயணத்தை தொடர்ந்த சசிகலா இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை தி நகர் வீட்டை வந்தடைந்தார்.
சசிகலா வருகையை தமிழகத்தின் மொத்த அரசியல் வட்டாரமும் உற்றுக் கவனிக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து திரும்பும் சசிகலா, அரசியல் ரீதியாக உருவாக்கும் தாக்கமே இதற்கு காரணம்.
2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா, 2021 ஜனவரி 27 அன்று விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு சிகிச்சை, பெங்களூரு ரிசார்ட்டில் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை முடித்துக்கொண்டு இன்று (பிப்ரவரி 8) தமிழகம் திரும்புகிறார்.
சசிகலா சென்னை வந்தால் நேரடியாக செல்ல விரும்புகிற இடம் ஜெயலலிதா நினைவிடம்தான். ஆனால் அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, பூட்டி வைத்திருக்கிறது அரசு. ஜெயலலிதாவுடன் சசிகலா வசித்த போயஸ் கார்டன் இல்லமும் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டது. இவை தவிர, அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் நடவடிக்கை கோரி மூத்த அமைச்சர்கள் டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதிமுக தரப்பின் இது போன்ற நடவடிக்கைகள் சசிகலா வருகையை இன்னும் அதிக முக்கியத்துவம் உரியதாக மாற்றியிருக்கின்றன.
"ஒரே அணியாக செயல்படுவோம்" - சசிகலா#Sasikala | #AMMK | #AIADMK | #sasikalareturns pic.twitter.com/TKdhAA5o0L
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2021
சசிகலா தமிழகம் வருகை, சசிகலாவுக்கு வரவேற்பு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் ‘லைவ்’வாக இந்தத் தளத்தில் காணலாம்.
Live Blog
VK Sasikala Tamil Nadu Arrival News : சசிகலா தமிழகம் வருகை, சசிகலாவுக்கு வரவேற்பு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் ‘லைவ்’வாக இந்தத் தளத்தில் காணலாம்.
அரசு,பதவி,அதிகாரம்,காவல்துறை அனைத்தும் கைவசம் இருந்தும் சொந்த கட்சி அலுவலகத்தை கூட மூடி வைக்கவேண்டிய அவலம் எடப்பாடி பழனிசாமி தவிர வேறு எந்த முதல்வருக்கும் ஏற்பட்டிருக்காது. நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து பெற்ற பதவியின் வலிமை அவ்வளவுதான் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி விமர்சனம் செய்துள்ளளர்.
சசிகலா: “அன்புக்கு நான் அடிமை; தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை; அடக்குமுறைக்கு அடிபணியமாட்டேன்” என்று பேசியுள்ளார்.
கட்சியைக் கைப்பற்றுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சசிகலா, “மிக விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன், அப்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.
சென்னை திரும்பும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த போலீசார் தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையையும் மீறி அதிமுக கொடியை பயன்படுத்தியதால், கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், காவல்துறையின் நோட்டீஸ் எங்களை கட்டுப்படுத்தாது என்று சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது எனவும், அவரது வாகனத்தை 5 வாகனங்களுக்கு மேல் பின் தொடரக் கூடாது எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக அந்த மாவட்ட அமமுக செயலாளருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது போலீஸ்.
#அதிமுக கொடியை #சசிகலா பயன்படுத்தக்கூடாது எனவும், அவரது வாகனத்தை #5_வாகனங்களுக்கு மேல் பின் தொடர கூடாது எனவும் #கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை_எச்சரிக்கை! மீறினால் சட்டப்படி நடவடிக்கை! pic.twitter.com/sQZsDTvhwx
— கே கங்காதரன் (@Gangatharanvks) February 8, 2021
சசிகலாவை வரவேற்று அவர் வரும் பாதை முழுக்க அமமுக-வினர் பேனர்கள் கட்டியிருக்கிறார்கள். கிருஷ்ணகிரி பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் அந்த பேனர்களை கத்தியால் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேனர்களை கிழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி கூறினர்.
பெங்களூரு புறநகர்ப் பகுதியான தேவனஹள்ளி பகுதியில் உள்ள ரிசார்ட்டில் சசிகலா கடந்த சில நாட்களாக தங்கினார். இன்று மாலை சென்னை வந்து சேரும் அவருக்கு தி.நகர் ஹபிபுல்லா சாலையில் இல்லம் தயார் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லம் அருகில் சசிகலாவுக்கு பங்களா கட்டும் பணி நடைபெறுகிறது. அது தொடர்பான வருமான வரித்துறை விசாரணை நடவடிக்கைகள் இருப்பதாலும், பணிகள் முழுமையாக நிறைவு பெறாததாலும் சசிகலா அங்கு தங்கவில்லை என கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை மற்றும் கொரோனா சிகிச்சை முடிந்து இன்று தமிழகம் வருகிறார் சசிகலா. பெங்களூருவில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் காரில் சென்னை புறப்படுகிறார்.
காலை 9 மணிக்கு மேல் எமகண்டம் என்பதால், அதற்கு முன்பாக சசிகலா தமிழக எல்லையை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழிநெடுகிலும் அவரை வரவேற்க டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். அதேபோல தமிழகத்திற்கும் அதிமுக கொடியுடன் வந்தால், போலீஸ் தரப்பு தடுக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதனால் சசிகலா வருகை சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்னையாகவும் பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights