பெங்களூரு சிறையில் இருந்து ஆக.14ம் தேதி விடுதலை ஆகிறார் சசிகலா? – ஆச்சாரி ட்வீட்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக […]

sasikala family boycott dhivakaran son Jeyanandh Dhivaharan marraige

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ்.மெகரிக் தெரிவித்திருந்தார். அதேசமயம், தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், அவர் உயிரிழந்த போதும் சசிகலா பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறை சென்றார்.

இந்த நிலையில், சசிகலாவின் விடுதலை தொடர்பான அறிவிப்பை கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக வெளிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியன்று சசிகலா விடுதலையாவார் என தெரிகிறது.


சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டரில், ஆகஸ்ட் 14, 2020 அன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vk sasikala to be release from bengaluru jail 14th august

Next Story
தமிழகத்தில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 900-ஐ கடந்ததுTamilnadu Coronavirus Daily report, Chennai Coronavirus Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com