சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சனிக்கிழமை பெங்களூரு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அவருடைய தோழி வி.கே.சசிகலா முதல்வராவதற்கு சட்டமன்றக் கட்சித் தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் கிளர்ச்சியாலும், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியதாலும் அவர் கூவத்தூர் நிகழ்வுக்குப் பிறகு தனது ஆதரவாளரான பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு 2017ம் ஆண்டு சிறைக்கு சென்றார். அதன் பிறகு, சசிகலா ஆதரவாளராக இருந்த முதல்வர் பழனிசாமியும் சசிகலாவுக்கு எதிராக அதிமுகவில் கிளர்ச்சி செய்த ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணைந்தது. சசிகலாவும் அவருடைய அண்ணன் மகன் டிடிவி தினகரனும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து 2021ம் ஆண்டு ஜனவரியில் விடுதலை ஆவார் என்று தகவல்கள் வெளியானது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், தண்டனைக் காலம் முடிந்து சசிகலா விடுதலையானால், அவர் அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அரசியல் நோக்கர்களும் அமமுகவினரும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், சசிகலா சிறையில் நன்நடத்தையைக் காரணம் காட்டி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு விண்ணப்பித்திருந்த நிலையில் அதனை பரிசீலித்த சிறை அதிகாரிகள் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து அவருடைய மனுவை நிராகரித்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார். சசிகலா சிறையில் நன்நடத்தை காரணம் காட்டி பெங்களூரு சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்ய விண்ணப்பித்திருந்தார். மேலும், அவர் தனது சிறைத் தண்டனையை ரத்து செய்யுமாறு விண்ணப்பித்துள்ளார். அது பரிசீலனைக்கு சிறைத் துறைத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சிறை வட்டாரங்கள் கூறுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், சசிகலாவை நவம்பர் மாதத்தில் முன்னதாக விடுதலை செய்யக் கோரியுள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரம் உயர் அதிகாரிகளின் பரிசீலனையில் இருந்தது. சசிகலா விடுதலை செய்யப்படுவதற்கு நிபந்தனையாக நீதிமன்றம் தீர்ப்பளித்த ரூ.10 கோடி அபராதத் தொகை டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் மாநில முதல்வருமான ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்வு நடந்துள்ளது.
எப்படியானாலும், சசிகலா அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் விடுதலையாகி தேர்தலில் தாக்கத்தைச் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். பாஜகவினர் பலரும் ரஜினியின் பக்கம் நிற்கின்றனர். ரஜினியின் அரசியல் வருகையால், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வழக்கத்திற்கு மாறான புதிய கூட்டணி சமன்பாடுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா சிறையில் நன்நடத்தையைக் காரணம் காட்டி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு விண்ணப்பித்திருந்த நிலையில் அதனை பரிசீலித்த சிறை அதிகாரிகள் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து அவருடைய மனுவை நிராகரித்துள்ளனர்.
சசிகலா சிறையில் நன்நடத்தையைக் காரணம் காட்டி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு விண்ணப்பித்திருந்த நிலையில் அதனை பரிசீலித்த சிறை அதிகாரிகள் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து அவருடைய மனுவை நிராகரித்துள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”