/indian-express-tamil/media/media_files/7g5AX4fJFPiuG85U9vLD.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர், நாளை திருச்சிராப்பள்ளி மாவட்டம், சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் "வெல்லும் சனநாயகம் மாநாடு" நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வருகை புரிவதை முன்னிட்டு கீழ்க்கண்டவாறு போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1) 25.01.2024 இன்று காலையிலிருந்து அனைத்து கனரக வாகனங்களையும் கீழ்க்கண்ட வழித்தடங்களில் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவேண்டும்.
2) இன்று (25.01.2024)-ந் தேதி காலை 12:00 மணியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர தேவை வாகனங்களை தவிர, அனைத்து வாகனங்களையும், கீழ்க்கண்ட வழித்தடங்களில் வாகனங்கள் பயணிக்க ஏற்றவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.
> சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக குன்னம், அரியலுார், கீழப்பழுர், புள்ளம்பாடி, கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பங்குடி ஜங்சான், பஞ்சப்பூர் வழியாக சென்று வரவேண்டும்.
மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், விராலிமலை வழியாக மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும்.
> சென்னையிலிருந்து கரூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலூர் பைபாஸ் ரோடு வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் சென்று வரவேண்டும்.
கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலுார், அரியலுார், கீழப்பழுர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.
> சேலத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மைக்கேல்நாயக்கன்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், கீழப்பழூர், திருமானுார், திருவையாறு வழியாக தஞ்சாவூர் சென்று வரவேண்டும்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும், அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார் பைபாஸ் ரோடு வழியாக குன்னம், அரியலுார், கீழப்பழுர், புள்ளம்பாடி, கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி பால்பண்ணை, திருவெறும்பூர், துவாக்குடி ரிங்க் ரோடு, கும்பங்குடி ஜங்சான், கீரனூர் வழியாக சென்று வரவேண்டும்.
> தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, வளநாடு கைக்காட்டி, துவரங்குறிச்சி வழியாக சென்று வரவேண்டும்.
தஞ்சாவூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் துவாக்குடி டோல்பிளாசா, துவாக்குடி ரிங் ரோடு, பஞ்சப்பூர், மதுரைரோடு, விராலிமலை, மணப்பாறை ரோடு. மணப்பாறை அரசுமருத்துவமணை, வையம்பட்டி வழியாக சென்று வரவேண்டும்.
சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளுர், கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.
> சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், பாடாலூர், தச்சங்குறிச்சி, பூவாளுர், கொள்ளிடம் "Y" ரோடு, திருச்சி வழியாக செல்லவேண்டும்.
> மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் "Y" ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லுார், துறையூர், பெரம்பலுார் வழியாக செல்லவேண்டும். திண்டுக்கலிலிருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களும், கொள்ளிடம் "Y" ரோட்டில் திருப்பிவிடப்பட்டு, நொச்சியம், மண்ணச்சநல்லுார், துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும்.
இன்று இரவு முதல்வர் வருகையை முன்னிட்டு மேற்கண்டவாறு திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.