/indian-express-tamil/media/media_files/ngj77Qf8hXFUFo9lgGb2.jpg)
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் டி.ஆர் பாலு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதிவரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தி.மு,க கூட்டணி முன்னிலையில் உள்ளது. 38 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தி.மு.க சார்பாக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட டி.ஆர். பாலு 22,388 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்ற டி.ஆர். பாலு தேர்தல் அதிகாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ‘ உங்கள் பிரச்சனை என்ன ? ( whats is your problem?) என்று கேட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது காரை நிறுத்த உரிய இடம் தரப்படவில்லை என்றும், வாக்கு எண்ணும் மையத்தில் இதற்கான வசதிகள் செய்யவில்லை என்று பேசினார். நான் புகார் செய்த பிறகு எதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதை முன்பே செய்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். வாகனங்கள் நிறுத்த உரிய இடங்கள் இல்லாத நிலையில் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.