சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சி.சி.டி.வி கேமரா பழுதாகி உள்ளது.
கடந்த 19ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு சேகரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிக், கல்லூரிகளில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த அறைகளுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, மேலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சித்தோடு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு சி.சி.டி.வி கேமிரா பழுதாகி உள்ளது. 220க்கும் மேற்பட்ட கேமிராக்கள் இருந்த நிலையில் டீச்சர்கள் இருக்கும் ரூமுக்கு வெளியே வைக்கப்பட்ட கேமரா பழுதானது. இதைத் தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா உடனே சரி செய்யப்பட்டதாக, காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.