Advertisment

வாக்கு சதவீதம் : திமுக ஹைய்யா..., அதிமுக ஐயகோ!!

அதிமுகவின் வாக்கு கடுமையாக சரிவடைந்துள்ளது. 2014ல் 44 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த அதிமுக, இந்த தேர்தலில், 18.49 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
loksabha, election, tamilnadu, dmk, admk, bjp, congress, votes, மக்களவை தேர்தல், தமிழ்நாடு, திமுக, அதிமுக பாரதிய ஜனதா, காங்கிரஸ், வாக்குகள்

loksabha, election, tamilnadu, dmk, admk, bjp, congress, votes, மக்களவை தேர்தல், தமிழ்நாடு, திமுக, அதிமுக பாரதிய ஜனதா, காங்கிரஸ், வாக்குகள்

தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள், திமுகவினருக்கு மகிழ்ச்சியையும், ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு ஏமாற்றத்தையும் வழங்கியுள்ளது.

Advertisment

2019 லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுகவும், ஒரே ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில், அதிமுகவின் வாக்கு கடுமையாக சரிவடைந்துள்ளது. 2014ல் 44 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த அதிமுக, இந்த தேர்தலில், 18.49 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

2014 லோக்சபா தேர்தலில், திமுக 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த திமுக, இத்தேர்தலில், 32.76 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியுள்ளது.

ஏற்றம் பெற்ற மற்ற கட்சிகள்

2014 தேர்தலில், 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில், 12.76 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி, இந்த தேர்தலில் 5.42 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ( 2014 தேர்தலில் 4.4 சதவீதம்)

2014 லோக்சபா தேர்தலில் 12.8 சதவீத வாக்குகளை பெற்றிருந்த மற்ற கட்சிகள், இம்முறை 24.62 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.

சரிவை சந்தித்த கட்சிகள்

2014 தேர்தலில் 5.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, இந்த தேர்தலில் 3.66 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில், 5.1 சதவீத வாக்குகளை பெற்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) இம்முறை, 2.19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

Dmk Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment